நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன் | மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் | Universal Pension Scheme..!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன் | மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்.


Universal Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான செயல்முறை அடுத்த சில மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும். அதன் பிறகு, இது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

Universal Pension Scheme: மத்திய அரசு நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. இதில் பெண்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்கும் பிரத்யேக திட்டங்கள் உள்ளன. தற்போது ஒரு புதிய ஓய்வூதிய திட்டம் பற்றிய பேச்சுகள் நடந்துவருகின்றன. நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

யுனிவர்சல் பென்ஷன் திட்டம் :-

அனைவரையும் உள்ளடக்கிய இந்த ஓய்வூதியத் திட்டம் தற்போது யுனிவர்சல் பென்ஷன் திட்டம் அதாவது உலகளாவிய ஓய்வூதியத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. இந்த புதிய திட்டம் பற்றிய ஒரு முக்கிய புதுப்பிப்பு உள்ளது. நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, மத்திய அரசு ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓய்வூதியம் தொடர்பான செயல்முறை அடுத்த சில மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும். அதன் பிறகு, இது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

Unorganised Sector: அமைப்புசாரா துறைகள் :-

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதாகும். இந்த ஆண்டு இறுதிக்குள், மக்கள் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த ஓய்வூதியத் திட்டம் நெகிழ்வானதாக இருக்கும். இதில் பயனாணிகளுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும். அவர்கள் தங்கள் விருப்பப்படி அதிகமாகவோ, அல்லது அவர்களால் முடிந்த அளவிற்கோ பங்களிக்க முடியும். 


இந்தப் புதிய திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர காரணம் என்ன?

சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தொழிலாளர்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும். குறைந்தபட்ச பங்களிப்பைத் தவிர, மக்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் சேமிப்பின் கூடுதல் தொகையை  டெபாசிட் செய்ய முடியும். அவர்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக அவர்களுக்கு வழங்கப்படும்.

உதாரணமாக, ஒரு தொழிலாளி தனது ஓய்வூதியக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 பங்களித்து, இடையில் ரூ.30,000 அல்லது ரூ.50,000 சேமிப்பை ஒதுக்க முடிந்தால், அவர் அந்தத் தொகையையும் தனது கணக்கில் ஓய்வூதியப் பங்களிப்பாக டெபாசிட் செய்யலாம். இது தவிர, ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்கான காலத்தையும் அவர் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, அரசாங்கம் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதை 58 என நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஒருவர் தனக்கு இப்போது ஓய்வூதியம் (https://zeenews.india.com/tamil/photo-gallery/8th-pay-commission-massive-pension-hike-from-rs-40000-to-more-than-rs-1-lakh-for-central-government-pensioners-8th-cpc-latest-news-576842) தேவையில்லை என்று நினைத்தால், அவர் ஓய்வூதியத்தைத் தொடங்குவதற்கான வயதை 60 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் மாற்றிக்கொள்ளலாம்.

Voluntary Scheme: தன்னார்வத் திட்டம் :-

அனைவரும் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த திட்டத்தில் பங்காளிக்க, பயனாணிகள் எங்காவது வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. தனது எதிர்காலத்திற்கு நிதி பாதுகாப்பை அளிக்க நினைக்கும் அனைவரும் இதில் பங்காளிக்கலாம். அதாவது, ஒருவர் சொந்தக் கடை வைத்திருந்தாலோ, அமைப்புசாரா துறை தொழிலாளியாக இருந்தாலோ, அனைவரும் இதில் எதிர்காலத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து, அதை பின்னர் ஓய்வூதியமாகப் பெறலாம். ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதாகும். ஆனால் அதன் பிறகும் யார் வேண்டுமானாலும் ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம்.

நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் அமைச்சகம் நிபுணர்கள் மற்றும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று வருகிறது. 2036 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் மொத்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 22 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை
close