பத்ம விருதுக்கான தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். | மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!! Padma Awards Application Apply Online - 2025

 பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!


2026ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் தேதி விண்ணப்பிக்க, பரிந்துரை செய்ய கடைசி நாளாகும்

கலை, இலக்கியம், இசை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கும். 2026-ஆம் ஆண்டுக்கான விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://awards.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதி விண்ணப்பிக்க, பரிந்துரை செய்ய கடைசி நாளாகும்.

1954ஆம் ஆண்டில் இருந்து பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டின் குடியர தினத்தன்று அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகிறது.

இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள்.

Award Apply Link

கருத்துரையிடுக

புதியது பழையவை
close