
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இலவச பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக காணலாம்.
இலவச பொறியியல் படிப்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் HL Mando Anand India எனப்படும் தனியார் நிறுவனத்தின் முழு நிதி உதவியோடு எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் HL Mando நிறுவனத்தில் தொழிற்பயிற்சி ஆகிய இணைந்து வழங்கப்படும்.
உதவித்தொகையோடு பட்டப்படிப்பு :-
மேலும் இந்த படிப்பிற்கான முழு கட்டணமும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்கப்படும். தொழிற்பயிற்சிக்கான உதவித்தொகையாக (stipend) மாதம் ரூ.14,500 வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கான கவ்லி கட்டணம், அட்மிஷன் கட்டணம், விடுதி செலவு, உணவு செலவு ஆகியவை அனைத்து அந்த தனியார் நிறுவனம் செலுத்தும்.
PM INTERNSHIP APPLICATION - APPLY NOW !!!
விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்.?
- இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும்.
- மின்னணுவியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திர பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரியர் வைத்திருக்கக்கூடாது.
- விண்ணப்பதார்கள் 2022-23 / 2023-24 / 2024-25 ஆகிய கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இலவச பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.