Tamil Nadu Commission for Protection of Child Rights Recruitment - 2025 | தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் & உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் & உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி, மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி, ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்காக அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (pass-port size) 20.03.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். (தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்).

அனுப்பவேண்டிய முகவரி :- 

செயலர்,

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,

நெ.183/1, ஈ.வே.ரா. பெரியார் சாலை,

பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்,

சென்னை-10.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பசிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :



கருத்துரையிடுக

புதியது பழையவை
close