உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட உதவியாளர் (Law Clerk – Research Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளங்கலை சட்டம் படித்தவர்களுக்கு இதுவே உகந்த அரசு வேலை வாய்ப்பு. விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு விவரங்கள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.
பணியிடங்களின் விவரம் :-
சட்ட எழுத்தர் – ஆராய்ச்சி உதவியாளர்
• காலியிடங்கள்: 90
கல்வித் தகுதி :-
• அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இளங்கலை சட்டம் (LL.B) முடித்திருக்க வேண்டும்.
• பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராக இருக்க வேண்டும்.
• 3 அல்லது 5 ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் :-
• தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.80,000 வரை சம்பளம்.
• இந்த வேலை முழு நேர ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு :-
• 20 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் (07.02.2025 தேதிப்படி).
தேர்வு முறை :-
1. எழுத்துத் தேர்வு (பார்ட் 1 & பார்ட் 2)
2. நேர்முகத் தேர்வு
• எழுத்துத் தேர்வு ஒரே நாளில் இரண்டு வேளைகளில் நடத்தப்படும்.
தேர்வு மையங்கள் :-
• நாடு முழுவதும் 23 நகரங்களில் தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் மற்றும் பிற நகரங்கள்.
முக்கிய தேதிகள் :
- விண்ணப்ப தொடங்கும் நாள்: 14.01.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2025
- தேர்வு நாள்: 09.03.2025
விண்ணப்பிக்கும் முறை :-
• விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :-
ரூ.500 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).