முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் | தொழில் தொடங்க 30% மானியத்தில் கடனுதவி..!! Mudhalvarin Kakkum Karangal Scheme - 2025

 முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் | தொழில் தொடங்க 30% மானியத்தில் கடனுதவி..!! Mudhalvarin Kakkum Karangal Scheme - 2025.

வங்கி கடன் வட்டி மானிய திட்டம் :-

முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தால் பேணப்படும் தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் சுயதொழில் மூலம் வருவாய் ஈட்டிட ஊக்குவிக்கும் பொருட்டு வங்கிக் கடன் வட்டி மானியத் திட்டம் 'பிளிஸ்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மூலம் பெறும் விவசாயம் அல்லாத தொழில்களுக்காக பெறப்படும் ரூ.10 இலட்சம் வரையிலான வங்கிக் கடனுக்கான வட்டியில் 75 % வரை வட்டிமானியம் வழங்கப்படுகிறது. மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையரின் சுய உதவிக்குழுக்களின் ரூ.15 இலட்சம் வரையிலான கடன்களுக்கு 100% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

தகுதி :-

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் விதவையர்.

வட்டி மானிய உச்சவரம்பு :-

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் விதவையரின் ரூ.10,00,000/- வரையிலான கடன்களுக்கு 75% வட்டி மானியமும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையரின் சுய உதவிக்குழுக்களின் ரூ.15,00,000/- வரையிலான கடன்களுக்கு 100% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள் :- 

1. இத்திட்டத்தில் பயன்பெற, வங்கியில் கடன் பெறுவதற்கு முன்பாக செயலாளர், தொகுப்பு நிதி முன்னாள் படைவீரர் நல இயக்ககத்திற்கு பயனாளி வசிக்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் உரிய படிவத்திலான விண்ணப்பம் அனுப்பப்படவேண்டும்.

2. வங்கி கடன் திரும்ப செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்தப்படும், தவணைத் தொகைகளுக்கு மட்டும் 75 % வட்டி மானியம் வழங்கப்படும், தவணைத் தொகை காலதாமதமாக செலுத்தி வங்கியாளரால் அபராதம் ஏதும் விதிக்கப்பட்டிருப்பின் அத்தொகைக்கு வட்டிமானியம் வழங்கப்படமாட்டாது.

3. வட்டி மானிய கேட்பினை இயக்ககத்தால் வகுத்தமைக்கப்பட்ட உரிய படிவத்தில் தவணைத் தொகையினை அசல் மற்றும் வட்டியுடன் செலுத்திய விபரம் வங்கியாளரின் சான்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், தவணைத் தொகை செலுத்த வேண்டிய உரிய தேதியிலிருந்து 6 மாத காலத்திற்குப் பிறகு செலுத்தப்பட்டிருப்பின் அதற்கு வட்டி மானியம் வழங்கிட இயலாது.

4. மூன்றுக்கு மேல் அசல் மற்றும் வட்டித் தவணைத் தொகையினை செலுத்தாத கடன்தாரர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படாது.




கருத்துரையிடுக

புதியது பழையவை
close