Jallikattu Online Registration Process | Madurai Jallikattu - 2025 | TN Jattikattu Apply Online !!ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம். Jallikattu Online Registration Process | Madurai Jallikattu - 2025 | TN Jattikattu Apply Online !!


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது. அதனை பின்பற்றி போட்டிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.

எனவே காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை இன்று மாலை 5 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.

அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இந்த தகவல் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

APPLICATION LINK'S

MADURAI - LINK
OTHER DISTRICT - LINK

கருத்துரையிடுக

புதியது பழையவை
close