1) தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.) மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெற இயலாது.
2) இத்திட்டத்தின்கீழ் பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான வரம்பான ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) இத்திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பிக்க முதுகலைப் பட்டப் படிப்பில் 55% விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4) வயது வரம்பு ஆண்களுக்கு 50 மிகாமலும் மற்றும் பெண்களுக்கு 55 மிகாமலும் இருக்க வேண்டும்.
5) அரசாணை(நிலை) எண்:72 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந3)துறை நாள் 16.09.2024 இன்படி முனைவர் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணாக்கருக்கு பல்கலைக் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட படிப்புப்பிரிவு கால அளவிற்குள் அல்லது அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகளுக்கு மட்டும் (Prescribed Duration of Course or Maximum 5 years) ஊக்கத் தொகை வழங்கப்படும்.
6) விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச் சான்று, கல்விச் சான்று, ஆதார் விவரம் மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்கான நுழைவு சான்று ஆகிய சான்றிதழ்களை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
7) புதுப்பித்தல் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்ட பின் மீதமுள்ள காலி இடங்களில் தகுதிபெறும் புதிய மாணாக்கர்களைக் கீழ்காணும் பாடப்பிரிவின் இடஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
8) மேற்கண்ட பிரிவுகளில் பெறப்படும் விண்ணப்பங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கூடுதலாகவும், குறைவாகவும் அல்லது விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் அதனை அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்ற மற்ற பாடப்பிரிவுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
9) ஒரு பாடப்பிரிவில் அதிக விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், உலகளாவிய அளவில் QS தர எண் பெற்ற கல்வி நிறுவனங்கள், University Grants Commission (UGC), National Institutional Ranking Framework (NIRF) ஆகிய நிறுவனங்களின் தரவரிசையில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
10) அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், அறிவியல் முன்னேற்றம் (Advance Science), மருத்துவம் (Medical) மற்றும் தொழில்நுட்பம் (Technology) போன்ற பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11) இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணாக்கரில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
12) பல்கலைக் கழகம் / கல்லூரிகளில் ஊக்கத்தொகை / ஊதியத்துடன் கூடிய படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
13) மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்வு செய்யும் போது, ஒரு இடத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்டோர் ஒரே விழுக்காடு மதிப்பெண் பெற்றிருப்பாராயின், மாணாக்கர்களின் வயதின் அடிப்படையில் வயதில் மூத்தோருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
14) கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் (ஊதியமில்லா விடுப்பில் இருந்தாலும் கூட) ஊக்கத்தொகை பெற தகுதியற்றவராவர்.
15) தவறான தகவல்களுடன் விண்ணப்பித்து கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் நீக்கப்படுவர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும.
16) மாணவரின் ஆராய்ச்சி திருப்திகரமாக இல்லை என தெரிய வந்தால், அம்மாணாக்கருக்கு கல்வி ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.
17) ஓர் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் அடுத்த ஆண்டு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
18) 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஊக்கத் தொகை பெற மாணாக்கர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முந்தைய ஆண்டு விண்ணப்பங்கள் மூலம் கல்வி ஊக்கத் தொகை பெற மாணாக்கர்கள் விண்ணப்பித்திருப்பின் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
19) கல்வி நிறுவன முதல்வரது கையொப்பம் மற்றும் பல்கலைக்கழக பதிவாளரின் பரிந்துரையுடன் விண்ணப்பம் வரப்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
20) மேற்கண்ட தகவல்களை மாணவர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டியும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது
21) விண்ணப்ப படிவத்தில் எவ்வித கலமும் விடுபடாமல், முழுமையாக பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.02.2025 அன்று மாலை 5.45 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
22) 28.02.2025-க்கு பிறகும், விளம்பரம் வெளியிடுவதற்கு முன்னர், பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் எனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, ஆணையர், ஆதிதிராவிடர் நலத ஆணையரகம், எழிலகம்(இணைப்பு), சேப்பாக்கம், G&GOT 6006UT-600005.
FRESH APPLICATION LINK
RENEWAL APPLICATION LINK