விவசாயிகள் 50 சதவீதம் மானியத்தில் மின் மோட்டார் உடன் கூடிய பம்புசெட் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நுண்ணீர்ப் பாசன அமைப்பு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே அமைத்தவர்கள் அமைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
தகுதிகள் :-
- சிறு,குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை.
- ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள அனைத்து வகையான விவசாயிகளுக்கும்.
- அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்மோட்டார் நான்கு ஸ்டார் தரத்திற்கு குறையாமல் விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு.
- மின் இணைப்புடன் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கிணற்றிற்கு.
- திறன் குறைந்த பழைய பம்பு செட்டுகளுக்கு மாறாக புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்துவதற்கு.
- தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை வழங்கும் மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகளை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.