தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. வாரியம் துவக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளை செயல்படுத்தி கொண்டிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற உயரிய நோக்கத்தினை கொண்டதாகும்.
குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், 1970-ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அண்மையில் பெயர் மாற்றம் ஏற்பட்டது. புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பது, மீள் குடியேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகளைப் பெற, ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நலத் திட்டத்தைப் பெறும் பயனாளிகள், ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:-
சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் ஆட்சேபகரமான பகுதியில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் ஆகிய பகுதிகள் வாரியத்தால் குடிசை பகுதி என பிரகடனம் செய்யப்பட்டது.அப்பகுதியில் வசித்து வரும் குடிசை வாசிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சுகாதார வசதியுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற அரசாணை எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்(UHD - 3)துறை, நாள்.25.01.2022 - ன்படி கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அ) பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்பதை உறுதி செய்ய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 / -ற்கு குறைவாக இருக்க வேண்டும்.இதற்கான வருவாய் துறை சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆ) குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தங்களது பெயரில் குடியிருப்பு மற்றும் மனைகள் இருக்க கூடாது. இதற்கான உறுதி மொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
இ) குடிசைப்பகுதி, ஆட்சேபனை உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான நீர் நிலை, காப்பு காடுகள், அபாயகரமான பகுதிகளான வெள்ள சேதபகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள்.
ஈ) சிதலமடைந்த வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள்.
உ) சாலையோரத்தில் வசிப்பவர்கள்.
ஊ) திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்.