ஓய்வூதி தாரர்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சலக ஊழியர் மூலம் என்ன வாழ்நாள் சான்றுகளை பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் என்ன டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வேலையை அஞ்சல் துறை தபால்காரர்கள் மூலம் அளித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இந்த நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமாம் திட்டம் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைரேகையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது இதற்கு சேவை கட்டணமாக ரூபாய் 70 தபல்காரரிடம் செலுத்த வேண்டும் என்ன வாழ்நாள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.