தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்குவது எப்படி ?

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்குவது எப்படி ?


தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் 1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. வாரியம் துவக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளை செயல்படுத்தி கொண்டிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.


தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற உயரிய நோக்கத்தினை கொண்டதாகும்.


குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழலை நிலைநாட்டவும், குடிசைவாழ் மக்கள் வாழும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள், அடிப்படை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனைகள், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், 1970-ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அண்மையில் பெயர் மாற்றம் ஏற்பட்டது. புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பது, மீள் குடியேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகளைப் பெற, ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நலத் திட்டத்தைப் பெறும் பயனாளிகள், ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

புதியது பழையவை
close