தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 15,000 வழங்கும் தமிழக அரசு..!! How to Apply..?
தமிழக பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2000 ம் ஆண்டிலிருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு தொகையாக வழங்கப்படும் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்படும் இந்த போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போட்டியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.