தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மூன்று நாள் பேக்கரி தயாரிப்பு பயிற்சி..
பேக்கரி சார்ந்த சொந்த தொழில் தொடங்க நினைக்கும் தொழில் முனைவோருக்கு சென்னையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க மூன்று நாள் பயிற்சி மற்றும் சான்றிதழ் பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன் அடையுங்கள். தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் சார்ந்த வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் பேக்கரி பொருள்களின் மூலப்பொருள்கள் பிராண்ட் போன்றவற்றால் கிடைக்கும் தன்மை கருவிகள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் ஹைதராபாத் காராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீஸ், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பண், பல ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய விரிவான தகவல்கள் இந்த பயிற்சியில் இடம்பெறவுள்ளது.
இப்ப பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் ஆண்,பெண் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வி தகுதியான எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து முழு விவரத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். நன்றி...
Small Content :-
Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing an 3 day Entrepreneurship Development program on “Bakery Products Training” from 11.09.2024 to 13.09.2024 (Time: 9.30 am to 6.00pm) at EDII, Chennai – 600 032.
Description :-
Government certificate will be issued Pre- registration compulsory Contact details: 8668102600 / 7010143022
Tags
Schemes