தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்...

 தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில்  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்...



தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற நல்ல நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 1978ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

திங்கள்தோறும் ரூபாய் 2,000/- ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 100/- மற்றும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுவதாகும். உதவித்தொகை பெறுபவரின் மறைவிற்குப்பின் அவரின் மரபுரிமையர்க்கும் வாழ்நாள் முழுவதும் அதே அளவிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை 795 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2016-2017 ஆம் ஆண்டில் 50 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.2018-2019 ஆம் ஆண்டில்  50இல்லிருந்து – 100ஆக உயர்த்தி தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது 1.12.2020 முதல் இத்திட்டத்தின் கீழ் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள் தோறும் ரூ. 3500/- உதவித்தொகை மற்றும் ரூ.500/- மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது. அதேபோல் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு திங்கள் தோறும் ரூ. 2500/- உதவித்தொகை மற்றும் ரூ.500/- மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.


விண்ணப்ப படிவம் லிங்க் 

கருத்துரையிடுக

புதியது பழையவை
close