நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் | நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி

நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் | நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடனுதவி..



நிலம் வாங்கும் திட்டம் : 

தகுதி :-

விண்ணப்பதாரர் 18 -65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது.

விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக் கூடாது.

நிபந்தனைகள் :-

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.

நிலத்தின் விலை சந்தை மதிப்பீடடின்படி நிர்ணையிக்கப்படும்.

முத்திரை தாள் மற்றும் பதிவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

வாங்கிய நிலம் பத்து ஆண்டுகளுக்குள் விற்கப்படக்கூடாது.

பயனாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம்.


கருத்துரையிடுக

புதியது பழையவை
close