வேளாண்மைப் பொறியியல் துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி.
நோக்கம்
- ✴ திறம்பட வாழ, திறன்கள் அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுதுபார்க்கவும் திறன்கள் தேவைப்படுகின்றன. உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்குவது அவசியம். டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும், கையாள்வதற்கும் 500 வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரித்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்புசெட்டுகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சியினை வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் அளித்து வருகிறது.
தகுதி வரம்பு
- ✴ பத்தாம் வகுப்பு அல்லது தொழில்முறை பயிற்சி (ITI)யில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக).
பயிற்சி விவரம்
பயிற்சி 1:
பாடத்தின் தலைப்பு | டிராக்டர் ஓட்டுநர் (Tractor Operator) -AGR/Q1101 |
குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அனுபவம் | 12 வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலுருந்து தொழில் பயிற்சி (I.T.I) / பட்டய படிப்பு (டிப்ளமோ) உடன் தொடர்புடைய துறையில் 6 மாத அனுபவத்துடன். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம் அல்லது 8 ஆம் வகுப்புடன் தொடர்புடைய துறையில் 3 வருட அனுபவம்
|
வழங்கப்படும் பயிற்சி விவரம் | டிராக்டர் மற்றும் அறுவடை இயாயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி |
வயது வரம்பு | 18 - 45 |
பயிற்சியின் எண்ணிக்கை | 20 பயிற்சிகள் |
பயிற்சி மையங்கள் | தமிழகத்திற்குச் சொந்தமான வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு அரசு இயந்திர பணிமனைகள் |
ஒரு பயிற்சிக்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை | 25 நபர்கள் |
கால அளவு | 384 மணி நேரம் - 8 மணி / நாள் - 48 நாட்கள் |
பயிற்சி 2:
பாடத்தின் தலைப்பு | வேளாண் இயந்திரங்கள் விளக்கமளிப்பவர் - AGR/Q1107 |
குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அனுபவம் | 12 வது தேர்ச்சியுடன் 4 வருட அனுபவம் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலுருந்து தொழில் பயிற்சி (I.T.I) / பட்டய படிப்பு (டிப்ளமோ) உடன் தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் அனுபவம். |
வழங்கப்படும் பயிற்சி விவரம் | வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்பு செட் பழுதுபார்பதற்கான பயிற்சி |
வயது வரம்பு | 18 - 45 |
பயிற்சியின் எண்ணிக்கை | 12 பயிற்சிகள் |
பயிற்சி மையங்கள் | தமிழகத்திற்குச் சொந்தமான வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு அரசு இயந்திர பணிமனைகள் |
ஒரு பயிற்சிக்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை | 16 முதல் 17 நபர்கள் |
கால அளவு | 480 மணி - 8 மணி / நாள் - 60 நாட்கள் |
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிராமப்புற இளைஞர்கள் கோயம்புத்தூர், வேலூர், திருவாரூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளிலோ அல்லது அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகங்களிலோ தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.