தமிழக அரசு வழங்கும் விவசாயிகளுக்கு மானியத்தில் விதை மற்றும் உரமிடும் கருவிகள் வழங்கும் திட்டம்.
வேளாண்மை பொறியியல் துறை சார்பாக மனிதனால் இயக்கக்கூடிய விதை மற்றும் உரமிடும் கருவி மானியத்தில் வழங்கும் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
குருவை சாகுபடி செய்யும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு.
மானிய விபரங்கள் :-
- சிறு,குறு,பெண்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் - 50% அல்லது அதிகபட்சம் ரூபாய் 10,000/-
- இதர விவசாயிகள் 40 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூபாய் 8,000/-
இந்த கருவியின் சிறப்பம்சங்கள் :-
- ஆள் பற்றாக்குறை காலங்களில் மிகவும் உபயோகமாக உள்ள இக்கருவி பெண்களால் எளிதில் பயன்படுத்த இயலும்.
- இக்கருவியின் மூலம் கடலை,நெல்,உளுந்து,மக்காச்சோளம் ஆமணக்கு,கரும்பு மற்றும் வரகு ஆகியவை விதைக்க இயலும்.
- இக்கருவியின் மூலம் விதைப்புச்செலவை குறைக்கலாம்.
- இக்கருவியின் மூலம் பயிர் அரை அடி முதல் 3 அடி இடைவெளியில் வரிக்கு வரி குறைந்தது அரை அடி முதல் நமக்கு தேவைக்கேற்ப இடைவெளியிலும் விதைக்க இயலும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து பயனடையலாம்.
Tags
Schemes