Kalaignar 100 Years Speaking Competition 2024 | Apply Online | கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி !!

Kalaignar 100 Years Speaking Competition 2024 | Apply Online | கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி !!


 சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி, மொழியுரிமை போன்ற திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்றும் ஆர்வமும் கொண்டவரா நீங்கள்?

திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் சமூக மாற்றங்களைச் சாதிக்க முடியும் என்று எண்ணுபவரா நீங்கள்?

பேச்சாற்றல் மூலம் மற்றவர்களைக் கவரக்கூடியவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் களம்!
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியும் கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் `என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டி உங்களுக்கான வாசலைத் திறக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அன்பகம், 614, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் உள்ள `விண்ணப்பம்’ பகுதியில் உங்கள் விவரங்களைத் தந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் முதல்கட்டத் தேர்வில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.07.2024.

முதல்கட்டத் தேர்வில் கலந்துகொண்டவர்களில் சிறப்பாகப் பேசியவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு மண்டலம் தோறும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு நடைபெறும் இறுதிக்கட்ட நிகழ்ச்சியில் மிகச்சிறப்பாகப் பேசிய முதல் மூன்று நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப் படும்.

`என் உயிரினும் மேலான’ நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

விதிமுறைகள் :-

  • 18 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  • போட்டி நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் முன்பதிவு செய்துகொண்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும் பேச்சுத் திறன் அடிப்படையில் சிறந்த பேச்சாளர்களை, மூன்று நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
  • நீங்கள் பேச வேண்டிய தலைப்பு உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
  • தலைப்பை மையமாக வைத்தே உங்கள் உரை அமைய வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், ஆதாரமற்ற தகவல்கள், நாகரீகமற்றச் சொற்களுக்கு அனுமதியில்லை.
  • படிக்கும் இடத்தில், பணிபுரியும் இடத்தில் தந்துள்ள அடையாள அட்டையை அணிந்திருப்பது அவசியம்.
  • போட்டியில் கலந்துகொள்பவர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பது அவசியம்.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.  
  • கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.

பேச்சுப்போட்டி தலைப்புகள் :- 

  • என்றென்றும் பெரியார். ஏன்?
  • அண்ணா கண்ட மாநில சுயாட்சி
  • கலைஞரின் தொலைநோக்குப் பார்வை
  • மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்
  • கலைஞர் - நவீன தமிழ்நாட்டின் சிற்பி
  • இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
  • சமூக நீதிக் காவலர் கலைஞர்
  • தமிழ்நாட்டு குடும்பங்களில் தி.மு.க.
  • பேசி வென்ற இயக்கம்
  • திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.




கருத்துரையிடுக

புதியது பழையவை
close