கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-25
அரசாணை(நிலை) எண்.70 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(SGS.1) துறை நாள் 15.3.2024.
நோக்கம் இத்திட்டத்தின் நோக்கம் குடிசைகளில் குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக ஆர்.சி.சி கூரை உள்ள வீடு கட்டுதல்.
தகுதியான பயனாளிகள் :
அரசாணை(நிலை) எண்.70 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(SGS.1) துறை நாள் 15.3.2024.
நோக்கம் இத்திட்டத்தின் நோக்கம் குடிசைகளில் குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக ஆர்.சி.சி கூரை உள்ள வீடு கட்டுதல்.
தகுதியான பயனாளிகள் :
1. குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றும் KVVT மறு சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள்.
2. ஒரு கிராம ஊராட்சியில் மிகக் குறைவான/KVVT மறு சர்வே பட்டியலில் எவரும் இடம்பெறவில்லை எனில் புதிய குடிசைகள் சர்வே (New Hut Survey) மற்றும் அனைவருக்கும் வீடு( Housing For ALL) சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் மட்டும் தேர்தெடுக்கப்படவேண்டும்.
3. சொந்தமான நிலம்/பட்டா உள்ளவர்கள் மட்டுமே அந்த இடத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள்.
4. புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்கு பதிலாக இத்திட்டத்தில் வீடு கட்ட இயலாது.(புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என வருவாய்துறையால் முறைப்படுத்தப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்)
தகுதியற்ற பயனாளிகள் :
1. வாடகை குடிசை வீட்டில் குடியிருப்பவர்கள் தகுதியற்றவர்கள்.
2. வணிக நோக்கத்திற்காக/விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் குடிசைகள் தகுதியற்றவை.
3. குடிசையில் ஒரு பகுதி RCC/ஓடு/ஆஸ்பெட்டாஸ் சீட்/உலோகத் தகடால் ஆனதாக இருந்தால் தகுதியற்றவை.
4. RCC/ஓடு/ஆஸ்பெட்டாஸ் சீட்/உலோகத் தகடால் ஆன கூரைகளுக்கு மேல் வேயப்பட்டுள்ள குடிசை வீடுகள் தகுதியற்றவை.
5. சொந்தமாக பக்கா வீடு உள்ளவர்கள் தகுதியற்றவர்கள்.
6. தகுதியற்ற பயனாளிகள் அரசு பணியாளர்கள் (பகுதிநேர/தொகுப்பூதிய/ தினக்கூலி பணியாளர்கள் தவிர)/உள்ளாட்சி பணியாளர்கள்/பொது நிறுவனப் பணியாளர்கள்/அரசாங்க உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள்/வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குடிசை வீடுகளில் குடியிருந்தாலும் தகுதியற்றவர்கள்.
பயனாளிகள் தேர்வு செய்யும் முறை குடிசைகள் விபரம் சர்வே செய்த பட்டியல் tnrd.tn.gov.in மற்றும் tndrdpr.org என்ற இணைய தள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(வ.ஊ) அந்தந்ந கிராம ஊராட்சியில் பயனாளிகளின் தற்போதைய தகுதியினை அறிந்து உறுதிசெய்திட கீழ்கண்ட நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும்.
1.ஊராட்சி மன்றத் தலைவர்.
2.உதவிப் பொறியாளர்/ஒன்றிய பொறியாளர்.
3.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.
4.ஒன்றிய மேற்பார்வையாளர்.
5.கிராம ஊராட்சி வார்டு மெம்பர்.
குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
வீட்டின் கட்டமைப்பு குறைந்தது 360 சதுர அடி Plinth area. அதில் 300 சதுரஅடி RCC கூரையும் 60 சதுர அடி RCC /தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். வீட்டின் அலகுத் தொகை ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூ.3.50 லட்சம் ஆகும். ஒரு வீட்டின் மொத்த அலகுத் தொகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 90 மனித சக்தி நாட்களும்,கழிப்பறைக்கு 10 மனித சக்தி நாட்களும் அடங்கும். மேலும் அதில் கழிப்பறை கட்ட ரூ.12,000/- SBM(G) திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
வீட்டின் பணி மேற்கொள்ளப்படும் விபரங்கள் :
1. அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)-க்கு இத்திட்ட செயலாக்க பணி ஒப்படைக்கப்படுகிறது.
2. Geo- Tagging, TNRD Upation முறையாக செய்யப்பட வேண்டும்.
3. Valution Certificate ஒன்றிய மேற்பார்வையாளரால் தயாரிக்கப்பட்டு,உதவிப் பொறியாளரால் மேலொப்பம் செய்யப்பட வேண்டும். உதவிசெயற்பொறியாளரால் வீட்டின் கட்டுமான தரம் கண்காணிக்கப்பட வேண்டும்.
4. Basement,Roof laid, Completion ஆகிய மூன்று நிலைகளில் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
5. கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி துறை மூலம் வழங்கப்படும்.
6. பயனாளிகளுக்கு தொகை Single Nodal Account ( ஒற்றை முறை கணக்கு) வழியாக வழங்கப்படும்...
Tags
Schemes