பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டல் செய்ய விண்ணப்பிப்பது எப்படி ?

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டல் செய்ய விண்ணப்பிப்பது எப்படி ?

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் விடைத்தாள் நகல் மறுகூட்டல்-1 விண்ணப்பிக்கும் முறை : 

விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்களது பயின்ற பள்ளிகள் வழியாகவும் தனித்திருவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07/05/2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 11/5/2024 சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் மறு கூட்டல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும் தேவர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண் மறு கூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கூறி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

மதிப்பெண் மறு கூட்டல் கூறி விண்ணப்பிக்கப்படும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாள்களின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறு கூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :- 

  • விடைத்தாள்களின் நகல் பெற - ₹275
  • விடைத்தாள் மறுகூட்டல் செய்ய - ₹205 / உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ₹305.


தேவர்கள் விடைத்தாள்களின் நகளிர்க்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்தி ஒப்புகைச் சீட்டை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு விடைத்தாள் நகல் வந்தவுடன் ஒப்புகைச் சீட்டை பயன்படுத்தி மாணவர்கள் DGE என்ற இணையத்தில் விடைத்தாள் நகலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பில் மறுகூட்டல் செய்வதற்கு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை
close