சென்னைப் பல்கலைக்கழகம் மாணவர் இலவச கல்வி திட்டம் 2024 - 2025

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி ?


சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி ?

சென்னை பல்கலைக்கழக மாணவர் இலவச கல்வி திட்டம்.

இந்த இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த இலவச கல்வி திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023 - 24 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து படங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் 11 மற்றும் 12 வது மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வருவாய்த்துறை வட்டாட்சியர் வழங்கிய வருமானச் சான்றிதழ் படி மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள்:

 

  1. பதினொன்றாம் (பொருந்தினால்) மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், (கட்டாயம்)
  2. சமீபத்திய வருமான சான்றிதழ் (ஒருவருடத்திற்குள்) வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். (கட்டாயம்)
  3. முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்),
  4. மாற்றுத்திறனாளி சான்றிதழ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்)
  5. தாய் / தந்தை இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்).

[வருமான சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத்தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம், சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்.]

விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள பொருத்தமான சான்றிதழ்களையும்; சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். இணையத்தளத்தில் எல்லா மென்பிரதிகளுடன் (softcopies of certificates), பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யத்தவறினால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.




கருத்துரையிடுக

புதியது பழையவை
close