இன்டர்நெட் கஃபே வாசகர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டவாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி அனைத்து வீட்டிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான்.
என்னதான் உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சொத்து பிரச்சனையால் அவர்களிடம் வேற்றுமை ஏற்படுகிறது.
அதுபோல சில வீடுகளில் உடன் பிறந்தவர்கள் 4 பேர் இருப்பார்கள். அவர்கள் கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி.
ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் சொத்து பிரச்சனை வந்து அவர்களை பிரித்து விடுகிறது.
ஒரு குடும்பத்தில் 3 -க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்கள் சொத்து கூட்டு பட்டாவாக இருந்தால் சொத்து பிரச்சனை, நிலம் பிரச்சனை, நில எல்லை தகராறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதனால் அதை தனி பட்டாவாக மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நிலத்திற்கு உரிமையாளர்களாக இருந்தால் அது கூட்டு பட்டா என்று சொல்வார்கள்.
கூட்டு பட்டாவில் இருக்கும் ஒரு நபர் தனி பட்டா பெற வேண்டும் என்று நினைத்தால் அந்த நபரிடம் சொத்தின் நகல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் இருக்க வேண்டும்.
பாகப்பிரிவினை பத்திரம் எதற்கு வேண்டும் என்றால், உங்களுக்கு ஒரு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த நிலம் எந்த திசையில் இருக்கிறது என்று அதில் தான் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனால் பாகப்பிரிவினை பத்திரம் இருக்க வேண்டும்.
தனிப்பட்டா பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன ?
1. ஆதார் அட்டை.
2. பத்திரம் நகல்.
3. வில்லங்க சான்று.
இதையெல்லாம் எடுத்து உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் 60 ரூபாய் கட்டணத்தில் விண்ணப்பித்தால் ஒரு மாத காலத்திற்குள் பட்டாவில் உங்கள் பெயர் மாறிவிடும்.
Tags
Law